மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சார்ஜ்மேன், எலக்ட்ரிஷியன் உள்பட 103 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ, 10 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட இதர விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம். கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.

மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள சார்ஜ்ஸ்மேன் (எலக்ட்ரிக்கல்), எலக்ட்ரிஷியன் ஏ, எலக்ட்ரிஷியன் பி ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 103 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன ஆகிய விவரங்களை பார்க்கலம்.
பணியிடங்கள் விவரம்:
சார்ஜ்மேன் - 24
எலக்ட்ரிஷியன் ஏ - 36
எலக்ட்ரிஷியன் பி - 36
WED 'B' - 07 என மொத்தம் 103 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: ஐடிஐ, பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி ஆகிய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியுடன் பணி அனுபவமும் அவசியம். எலக்ட்ரிஷியன், சார்ஜ்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரால் வழங்கப்பட்ட வயர்மேன் அனுமதி சான்றிதழ் அவசியம்.
WED B - பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டிப்ளமோ அல்லது பிஏ, பி.எஸ்.சி, பி.பி.ஏ, பி.காம் ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி மற்றும் அனுபவம் குறித்த விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: தேர்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 4 வகையான பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 45 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் எவ்வளவு?:
சார்ஜ்மேன் - ரூ. 28,740 - 3% 72,110/-
எலக்ட்ரீஷியன் 'A' - ரூ. 28,430 - 3% - 59,700/-
எலக்ட்ரீஷியன் 'B' - ரூ. 28,280 - 3% - 57,640/-
WED 'B' 'B' - ரூ. 28,280 - 3% - 57,640/- வரை சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்பயிற்சி தேர்வு, எழுத்துத் திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தில் தேர்வு அறிவிப்பினை படித்துவிட்டு, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும்: 25.02.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.hindustancopper.com/Upload/Notice/0-638733414728396250-NoticeFILE.pdf.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications