துணை ராணுவ படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. கை நிறைய சம்பளம்!
சென்னை: இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) துணை ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சப் இன்ஸ்பெக்டர் (பயோனீர்) காலிப்பணியிடங்கள் 18 உள்ளன.

வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். தகுதியான பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அது போல் சப் இன்ஸ்பெக்டர் (டிராப்ட்ஸ்மேன்) பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அது போல் சப் இன்ஸ்பெக்டர் (கம்யூனிகேஷன்) பிரிவிற்கு 56 இடங்கள் காலியாகவுள்ளது. இந்த பதவிக்கான வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், இயற்பியல், தகவல் தொடர்பியல் போன்ற ஏதாவது பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டாஃப் நர்ஸ்) பணிக்கு 39 இடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ 35,400- 1,12,400 வழங்கப்படுகிறது. இப்பணிகளுக்கு விண்ணபிக்க ரூ 200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
www.ssbrectt.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 7 ஆகும்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications