சென்னையில் பெண்கள் உதவி மையத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. மாவட்ட ஆட்சியர் அழைப்பு
சென்னை:பெண்களுக்கான உதவி பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவர்கள் வரும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டிருந்த அறிவிப்பில், பெண்களுக்கான உதவி பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய, அனுபவம் உள்ள நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

அதன்படி, தகவல் தொழில்நுட்ப பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.
வழக்கு பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் 35 வயதுக்குள்பட்ட சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 1 வருடம் முன் அனுபவம் உடையவராகவும், உள்ளூரைச் சாா்ந்த பெண்களாகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
பன்முக உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள், முன் அனுபவம் கொண்ட, உள்ளூரைச் சோ்ந்த பெண்களாகவும், நன்கு சமைக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 6,400 வழங்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் https://chennai.nic.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப்.5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் " இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications