பழனியாண்டவர் கல்லூரியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்! செம சான்ஸ்.. அப்ளை பண்ணுங்க
சென்னை: பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஜூனியர் அஸ்சிஸ்டண்ட், டைப்பிஸ்ட், ரெக்கார்டு கிளர்க், அலுவலக உதவியாளர் என மொத்தம் 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிவகிரி என்ற பகுதியில் பழனியாண்டவர் பாலி டெக்னிக் கல்லூரி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரியில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

பணியிடங்கள் விவரம்:
1. இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் ( எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரனிக்ஸ் என்ஜினியரிங்) - 01
2. திறன் உதவியாளர் ( மெக்கானிக்கல்) - 03
3. ஆய்வக உதவியாளர் (மெக்கானிக்கல்) - 01
4. திறன் உதவியாளர் (சிவில்) - 01
5. ஆய்வக உதவியாளர் (சிவில்) - 02
6. ஆய்வக உதவியாளர் (என்ஜினியரிங்) - 01
7. இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் - 01
8. ஸ்டோர் கீப்பர் (ஜூனியர் உதவியாளர் கேடர்) - 02
9. ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் - 01
10. டைப்பிஸ்ட் - 01
11. ரெக்கார்டு கிளர்க் - 02
12. அலுவலக உதவியாளர் - 01
கல்வி தகுதி:
8 ஆம் வகுப்பு, 10, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். என்ஜினியரிங்க் சார்ந்த பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ / NTC / NAC என ஏதாவது ஒரு படிப்பு முடித்து இருப்பது அவசியம். டைப்பிஸ்ட் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங்க் முடித்து இருக்க வேண்டும். ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்ள் விண்ணப்பிக்கலம.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 37 வயது வரையும், எம்பிசி, பிசி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் http://www.palaniandavarpc.org.in/ என்ற கல்லூரி இணையதளம் வாயிலாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய சான்றுகளுடன் " தாளாளர், அருள்மிகு பழனியாண்டவர் பாலி டெக்னிக் கல்லூரி, பழனி: 624601, திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் 20.03.2025 க்கு முன்பாக அனுப்ப வேண்டும். அதன் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது. தபால் மூலம் விண்ணப்பிக்கும் போதும் உறையின் முகப்பின் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: http://www.palaniandavarpc.org.in/images/pdf/Website_details-17-posts.pdf












Click it and Unblock the Notifications