மருதமலை முருகன் கோயிலில் வேலை.. 8ம் வகுப்பு போதும்! மாதம் 58,000 வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: மருதமலை முருகன் கோயிலில் அலுவலக உதவியாளர், டிரைவர் என 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் மருதமலை முருகன் கோயிலில் அலுவலக உதவியாளர், பிளம்பர், டிக்கெட் சேல்ஸ் கிளர்க், ஹாஸ்டல் கண்காணிப்பாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

பணியிடங்கள் விவரம்: டிக்கெட் விற்பனை எழுத்தாளர் (01 பணியிடம் ), அலுவலக உதவியாளர் (02), காவலர் (04), திருவலகு (02), விடுதி காப்பாளர் (01), பல வேலை (01), ஓட்டுநர் (05), பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர் (01), மினி பஸ் கிளீனர் (01) என 19 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதுபோக உப கோயிலான கரிவதரதராஜ திருக்கோயில், வடவள்ளி கோயிலில் ஒரு காவலர் பணியிடம் மற்றும் ஒரு திருவலகு பணியிடம் நிரப்பப்படுகின்றன. ஆக மொத்தமாக 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி:
* டிக்கெட் விற்பனை எழுத்தாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியுடன் இலகு ரக ஓட்டுநர் உரிமம் அவசியம். முதலுதவி சான்றிதழ் அவசியம். ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* பிளம் ஆபரேட்டர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குழாய் தொழில்/ குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும். தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* மின் உதவியாளர் பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர், தொழில் பயிற்சி நிறுவனர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* மினி பஸ் கிளீனர் பணியிடத்திற்கு 8- ஆம் வகுப்பு கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி போதும். மோட்டார் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதர பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 18- வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் அவசியம். சம்பளம் பணியின் தன்மைகேற்க மாறுபடும். அதிகபட்சமாக மாதம் ரூ.58,600 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். www.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணைய தளத்தில் இருந்து இலவசமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம்-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 05.04.2023 ஆகும். https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவம் மற்றும் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications