எம்பி மகனுக்கே.. கொள்கைப் பாடம் எடுக்க முடியல! Gen Zக்கு எடுக்க போகுதா? திமுக மீது சரமாரி கேள்வி!
சென்னை: திமுக எம்பியும் கொள்கை பரப்பு செயலாளருமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு எம்பி தனது சொந்த மகனையே திமுகவில் தக்க வைக்க முடியவில்லை. இப்படி இருக்கையில், மற்ற GenZ இளைஞர்களை எப்படி கட்சியில் தக்க வைப்பார்கள்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்திருந்தது. இதைவிட முக்கியமான விஷயம், தேர்தலுக்கு முன்பு வரை கூடவே இருந்த கூட்டணி கட்சிகள் தற்போது தவெக பக்கம் தாவியிருக்கின்றன. இது திமுகவை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது.

GenZ பொலிட்டிக்கல் என்ட்ரி
எனவே தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கியது திமுக தலைமை. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் முக்கியமானது இளம் தலைமுறையினரின் பொலிட்டிக்கல் என்ட்ரிதான். திராவிட கட்சிகளின் 60 ஆண்டுக்கால அரசியல் இளம் தலைமுறையினருக்கு சலிப்பை கொடுத்திருக்கிறது. எனவே மாற்றத்திற்காக விஜய்க்கு வாக்களித்திருந்தனர். இதை கவனித்த திமுக தலைமை இளம் தலைமுறையினர் மத்தியிலும் திராவிட அரசியலை விரிவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தது.
GenZ மீட் அப்
இந்த முயற்சியின் ஒரு பகுதிதான் GenZ மீட் அப். அறிவாலயத்தில் இளைஞர்களை திரட்டி திராவிட அரசியல் வகுப்பு எடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இளைஞர்களிடையே மேலும் அரசியல் பணிகளை தீவிரப்படுத்தியிருந்தது. இந்த முயற்சிகள் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றிருந்தது. விட்ட இடத்தை பிடிக்க திமுக ரொம்பவே மெனக்கெடுகிறது. நிச்சயம் அடுத்த தேர்தலில் விஜய்க்கு டஃப் ஆக இருக்கும் என்று பேச்சுக்கள் அடிபட்டன.
இப்படி பாசிட்டிவாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், திமுக எம்பியின் மகன் தவெகவில் இணைந்திருந்தார். இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
திராவிட இயக்க அரசியல்
அதிலும் ஜெகத்ரட்சகன் சாதாரண ஆளா என்ன? நல்ல தமிழ் புலமை கொண்டவர். கம்பராமாயணம், மகாபாரதம், சங்க இலக்கிய பாடல்களை கரைத்து குடித்தவர். அவர் பேசும்போது, இதிலிருந்து மேற்கோள்காட்டிதான் பேசுவார். இதுபோக தமிழ் கலாச்சாரம், பக்தி இலக்கியத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போக.. ஆழ்வார்கள் ஆய்வு மையத்தை நிறுவி நடத்தி வருகிறார். இப்பேர்ப்பட்ட ஜாம்பவான் , தனது மகனுக்கு திராவிட இயக்க அரசியல் குறித்து சொல்லிக்கொடுக்காமலா இருந்திருப்பார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், கொள்கை சுதந்திரம் என்பது மற்ற கட்சிகளை விட திமுகவில்தான் அதிக அளவில் இருக்கிறது என்று உடன்பிறப்புகள் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
ஜனநாயகத்திற்கு உதாரணம் திமுக
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், தங்கள் உறவினர்கள் திமுகவினராக இருந்தால்.. அவர்களின் சுக, துக்கத்திற்கு கூட சுதந்திரமாக போக முடியாதவர்களாக இருந்தார்கள். காரணம் உறவினர்கள் திமுகவினர் என்பதால்தான். திமுகவில் அப்படியான எந்த செட்டப்பும் கிடையாது. எங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறவர்களை கட்சியில் இணைத்துக்கொள்கிறோம். அதே நேரம் முரண்படுகிறவர்கள் மற்ற கட்சியில் இணைவதையும் நாங்கள் ஏற்கத்தான் செய்கிறோம் என்பது உடன்பிறப்புக்களின் வாதம்.
ஜெகத்ரட்சகனின் மகனுக்கு, அவர் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்கிற உரிமை இருக்கிறது. அதை அனுமதிப்பதுதான் ஜெகத்ரட்சகனின் நேர்மை. அந்த வகையில் திமுகவினர் நேர்மையானவர்கள்தான் என்று உடன்பிறப்புகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications