பச்ச தண்ணி கூட குடுக்கல.. கரூர் சம்பவத்துக்கு காரணம் விஜய்! அதிரடியாகப் பேசிய நயினார் நாகேந்திரன்!
விழுப்புரம்: கரூர் சம்பவத்தன்று முதலமைச்சர் விஜய் கரூருக்கு 12:00 மணிக்கு வருகிறேன் என சொல்லி விட்டு இரவு 7 மணிக்கு வந்தார். என்னை பொறுத்த வரைக்கும் கரூர் சம்பவத்திற்கும் விஜய் ஒரு காரணமாக இருப்பார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," பழைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய உள்ள ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆளுநரை சந்தித்து புகார் அளித்தோம். அதிமுக ஆட்சியின் போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் தந்ததை நினைவூட்டுகிறேன். போதைப் பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதேபோல் 150 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் உள்ளன. தினந்தோறும் படுகொலை சம்பவம் நடைபெற்று உள்ளது. முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என நினைக்கின்றீர்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் கேள்வி. கரூர் சம்பவத்தன்று முதலமைச்சர் விஜய் கரூருக்கு 12:00 மணிக்கு வருகிறேன் என சொல்லி விட்டு இரவு 7 மணிக்கு வந்தார். என்னைப் பொறுத்த வரைக்கும் கரூர் சம்பவத்திற்கும் விஜய் ஒரு காரணமாக இருப்பார் என்பது தான்.
முதலமைச்சர் விஜய் பொதுமக்களை 7 மணி காக்க வைத்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவ்வளவு சம்பவம் நடந்த பிறகும் கூட பொதுமக்களை சந்திக்காமல் சென்னை புறப்பட்டு சென்றார். அங்கிருந்து எதுவும் கேட்காமல் இறந்தவர்களின் உறவினர்களை அழைத்து பேசியது என்ன?" என்றார்.














Click it and Unblock the Notifications