லிங்கம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? பிளஸ், மைனஸ் இதுதான்! முழு எபிசோடும் பார்க்கலாமா? வேண்டாமா? ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள 'லிங்கம்' வெப் சீரிஸ் இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. "கேங்ஸ்டர் சீரிஸ்" என்றாலே பலருக்கும் உடனே வடசென்னை, புதுப்பேட்டை போன்ற படங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த வரிசையில் 'லிங்கம்' ரசிகர்களை கவர்ந்ததா? முதல் எபிசோடிலேயே கனெக்ட் ஆகிறதா? இல்லையென்றால் பொறுமையாக பார்த்தால் மட்டும்தான் அதன் பலம் புரியுமா? கதிரின் நடிப்பு எப்படி? கதையும் திரைக்கதையும் எந்த அளவுக்கு வேலை செய்திருக்கிறது?(Lingam Web Series Review) என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரசிகரின் பதிவு

இந்த சீரிஸ் பார்த்த சிவக்குமார் வெங்கடாசலம் எழுதிய பதிவு இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் தனது பதிவில், ஒரு எபிசோடு வரை எதுவுமே கனெக்ட் ஆகலை. வேலைக்காகாது போலன்னு நினைச்சு பாதியிலேயே நிறுத்தலாம்னு தோணுச்சு. ஆனா கதிர் ஜெயிலுக்குப் போற இடத்துல இருந்து சீரிஸ் வேற ரூட்டுக்கு போயிடுச்சு. அதுக்கப்புறம் தான் ஆர்வமா பார்க்க ஆரம்பிச்சேன் என்று எழுதியிருக்கிறார்.

Lingam Lingam Web Series Kathir Tamil Web Series OTT Review

அதோடு, கதைன்னா புதுசு எதுவும் கிடையாது. ஒரு டானின் எழுச்சி பற்றிய வழக்கமான கதை தான். சுப்பிரமணியபுரம், புதுப்பேட்டை, வடசென்னை மாதிரி படங்களோட தாக்கம் நிறைய தெரியும். ஆனாலும் கேரக்டர்களை எழுதிய விதம் நல்லா இருக்கு. அண்ணாச்சி, போஸ், சாமியப்பன் எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. குறிப்பா அண்ணாச்சி கேரக்டர் சூப்பர் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி வட்டார மொழியை ரொம்ப இயல்பாக பயன்படுத்தியிருக்காங்க. கதிர் நன்றாக நடித்திருக்கிறார். ஆர்யாவின் தம்பி ஷாஹிருக்கும் முக்கியமான கேரக்டர். திவ்யபாரதி சில இடங்களில் பழைய நடிகை தீபா வெங்கட்டை நினைவுபடுத்துறாங்க. பிக் பாஸ் பூர்ணிமா ரவிக்கும் அன்பே சிவம் நல்ல சிவம் போன்ற நல்ல கேரக்டர் இருக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.

Lingam Lingam Web Series Kathir Tamil Web Series OTT Review

அதேபோல், ஓடிடி என்பதால் கெட்ட வார்த்தைகள் அதிகமா இருக்கு. ஆனா அது அந்த உலகத்துக்கு பொருந்துற மாதிரி இருக்கு. வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆகாஷ் போலீஸ் அதிகாரியாக வர்றார். அந்த கேரக்டர் மூலம், காவல்துறை என்பது தன்னிச்சையான அதிகாரம் கொண்டதாக இல்லாமல் எந்த அளவிற்கு ரவுடிகளின் ஆதிக்கம் எப்படி வேலை செய்கிறது என்பதையும் இயக்குநர் சொல்லியிருக்கிறார்" என்றும் அவர் தனது பதிவில் எழுதியுள்ளார்.

லிங்கம் வெப் சீரிஸ் ரிவ்யூ

'லிங்கம்' ஆரம்பத்தில் மெதுவாக நகரும் சீரிஸ் என்பது உண்மை. முதல் இரண்டு எபிசோடுகள் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், கதையின் பின்னணியை அமைக்கவுமே செல்கின்றன. அதனால் சிலருக்கு "இது எங்கே போகுது?" என்ற உணர்வு வரலாம்.

ஆனால் கதிரின் வாழ்க்கை ஜெயிலுக்கு போகும் இடத்திலிருந்து திரைக்கதை வேகம் பிடிக்கிறது. அங்கிருந்து ஒவ்வொரு எபிசோடும் அடுத்ததை பார்க்க வைக்கும் ஆர்வத்தை உருவாக்குகிறது. அதுதான் இந்த சீரிஸின் பெரிய பலம்.

Lingam Lingam Web Series Kathir Tamil Web Series OTT Review

கதிர் இன்னொரு முறை தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். போலீஸ் ஆக வேண்டும் என்று கனவு காணும் இளைஞனில் இருந்து, சூழ்நிலையால் கேங்ஸ்டர் உலகத்துக்குள் தள்ளப்படும் மனிதராக அவர் மாறும் விதம் நம்ப வைக்கிறது.

Lingam Lingam Web Series Kathir Tamil Web Series OTT Review

லிங்கம் வெப் சீரிஸின் பிளஸ் பாயிண்ட்

சீரிஸின் இன்னொரு பலம் அதன் பின்னணி. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியின் வட்டார மொழி, அந்த காலத்து வீடுகள், ஜெயில், கடற்கரை, அரசியல், ரவுடிசம் என எல்லாமே இயல்பாக தெரிகிறது. இது ஒரு சினிமா பார்க்கும் உணர்வை விட, அந்த காலத்துக்குள் போன மாதிரி ஒரு ஃபீலை கொடுக்கிறது.

குறைகள்

அதே நேரத்தில், குறைகளும் இருக்கின்றன. இண்ட்ரவல் சமயத்தில் வரும் சில காதல் காட்சிகள் கதையின் வேகத்தை கொஞ்சம் குறைக்கின்றன. கடைசி எபிசோடுகளில் வழக்கமான கேங்ஸ்டர் சினிமா பாதைக்குள் செல்வதும் தெரிகிறது. சில கேள்விகளுக்கு முழு பதிலும் கிடைக்கவில்லை.

மொத்தத்தில், 'லிங்கம்' ஒரு மாஸ்டர் பீஸ் என்று சொல்ல முடியாது. ஆனால் முதல் எபிசோடு பார்த்து முடிவு பண்ணிடக் கூடாத சீரிஸ். கொஞ்சம் பொறுமையோடு பார்த்தால், இண்ட்ரோவலுக்கு பிறகு கதை உங்களை நிச்சயம் இழுத்துக்கொண்டு போகும். கேங்ஸ்டர் கதைகள் பிடிக்கும் ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் நல்ல ஒரு வீக்கெண்ட் வாட்ச்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+