பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. 592 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மறந்துடாதீங்க
பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கை நிறைய சம்பளம் கிடைக்கும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடவர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க ஆப் பரோடாவில் எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 592 காலிப்பணியிடங்கள் மொத்தம் அறிவிக்கப்படன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.. இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
மேனேஜர்( நிதி), ஆர்கிடெக், ஏ.ஐ, ரிலேஷன்ஷிப் மேனேஜர், ப்ராஜெக்ட் மேனேஜர், டிஜிட்டல் பார்ட்னர்ஷிப் லீட், டேடே என்ஜினியர், பிசினஸ் மேனேஜர் உள்பட மொத்தம் 83 வகையான பணியிடங்களில் 592 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முதல் பி இ, பிடெக், எம்பிஏ, சிஏ, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை அனைத்து பணியிடங்களுக்கும் ஒரே மாதிரியான வரம்பு இல்லை. பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. பணிக்கு தேர்வு ஆகும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் 40 ஆயிரம் முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதார்கள் https://www.bankofbaroda.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க 19.11.2024 கடைசி தேதியாகும். அதாவது இன்றே கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் கல்வி தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-10/Advertisement-Contractual-30102024-Final-19-18.pdf கிளிக் செய்யவும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications