"பேங்க் ஆஃப் பரோடா" வங்கியில் அதிகாரி வேலை.. 592 பணியிடங்கள்! கை நிறைய சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் எஸ்ஓ எனப்படும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க என்ன கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வங்கியில் பணியாற்றுக்கிறார்கள். மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால், கை நிறைய சம்பளம் + சலுகைகள் கிடைக்கும்.

இதனால், வேலை தேடும் இளைஞர்கள் இத்தகைய பொதுத்துறை வங்கிகளில் வேலை செய்ய பெரிதும் ஆர்வம் காட்டுகிறர்கள். பேங்க ஆப் பரோடாவில் காலியாக எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம் & கல்வி தகுதி: மேனேஜர்( நிதி), ஆர்கிடெக், ஏ.ஐ, ரிலேஷன்ஷிப் மேனேஜர் என 83 வகையான பணியிடங்களில் உள்ள 592 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முதல் பி இ, பிடெக், எம்பிஏ, சிஏ, முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு & சம்பளம்: பணிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் 40 ஆயிரம் முதல் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணம் ஆகும்.
தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதார்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 19.11.2024 கடைசி தேதியாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-10/Advertisement-Contractual-30102024-Final-19-18.pdf கிளிக் செய்யவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications