For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாங்க் ஆப் பரோடாவில் நல்ல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு.. 511 காலிப்பணியிடங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: பாங்க் ஆப் பரோடாவில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 511 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Senior Relationship Managers, e- Relationship Managers, Territory Heads, Group Heads, Product Head- Investment and Research, Head- Operations and Technology, Digital Sales Manager, IT Functional Analyst- Manager Posts ஆகிய பணிகளை இந்தியா முழுவதும் நிரப்ப வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Jobs in Bank of Baroda for 511 vacancies throughout India

இதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை www.bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி மற்றும் வயது தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது குழு ஆலோசனை அல்லது ஏதேனும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்திற்கு நல்ல செய்தி.. அடுத்த நான்கு நாளைக்கு இங்கெல்லாம் சூப்பர் மழைக்கு வாய்ப்புதமிழகத்திற்கு நல்ல செய்தி.. அடுத்த நான்கு நாளைக்கு இங்கெல்லாம் சூப்பர் மழைக்கு வாய்ப்பு

Senior Relationship Managers பணிக்கு 24 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். e- Relationship Managers பணிக்கு 23 வயது முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். Territory Heads பணிக்கு 27 வயது முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்., Group Heads பணிக்கு 31 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும்.

Product Head- Investment and Research பணிக்கு 28 - 45 வயது வரை இருத்தல் வேண்டும். Head- Operations and Technology பணிக்கு 31 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். Digital Sales Manager பணிக்கு 26 வயது முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

IT Functional Analyst- Manager Posts பணிக்கு 26 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். ஆன்லைன் மூலம் கட்டணங்கள் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ 100, மற்றவர்களுக்கு ரூ 600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

English summary
Jobs in Bank of Baroda for 511 vacancies throughout India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X