பொதுத்துறை வங்கியில் வேலை.. 600 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. 3 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் இயங்கும் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளது.

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் 600 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்: நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இந்த பயிற்சி பணியிடங்கள் நிரப்படுகின்றன. மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 600 ஆகும். தமிழகத்தில் 21 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கேரளாவில் 13 பணியிடங்களும் கர்நாடகாவில் 21 பணியிடங்களும் நிரப்ப படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும். வயது வரம்பை பொறுத்தவரை 20-28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு: ஓராண்டு ஒப்பந்த அடிபடையில் இந்த பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படும். மாதம் ரூ. 9 ஆயிரம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, நேர்மகத்தேர்வு / குரூப் டிஸ்கசன்ஸ் முறையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரகள் ஆன்லைன் வழியாக விண்ணபிக்கலம. விண்ணப்ப கட்டணமாக ரூ. 150+ ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம் ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க அவகாசம் நாளை முதல் தொடங்குகிறது. வரும் 24.10.2024 கடைசி நாள் ஆகும். ஆர்வமும் தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://bankofmaharashtra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு குறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/ccbfbfc3-69ae-40a2-a596-c347e0eccc72.pdf கிளிக் செய்யவும்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications