வங்கிகளில் அதிகாரி வேலை.. 896 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (எஸ்.ஓ) உள்பட 896 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விடவும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
ஐடி அதிகாரி கிரேட் I - 346 பணியிடங்கள்
வேளாண் கள அலுவலர் - 25
ராஜ்பாஷா அதிகாரி - 170
சட்ட அதிகாரி - 125
எச்.ஆர்/ பணியாளர் அதிகாரி - 205
மார்க்கெட்டிங் அதிகாரி - 25 என மொத்தம் 896 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஐடி(தகவல் தொழில்நுட்பம்) அதிகாரி பணிக்கு என்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். வேளாண்மை கள அதிகாரி பணிக்கு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பயோடெக்னாலஜி உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த படிப்புகளை முடித்து இருப்பது அவசியம். எல்.எல்.பி பணிக்கு சட்டம் படித்து முடித்து இருக்க வேண்டும்.. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.
தேர்வு எப்போது?: தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே 21.08.2024- கடைசி நாளாகும். விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் இன்றே விண்ணப்பித்து விடவும். முதன்மை தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். மெயின் தேர்வு டிசம்பர் மாதத்திலும் நேர்முகத்தேர்வு பிப்ரவரி/மார்ச்சில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்பாக தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.ibps.in/index.php/specialist-officers-xiv/ செய்யவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications