மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. பெங்களூரில் பணியிடம்.. மாதம் 60 ஆயிரம் சம்பளம்.. அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BEML-ல் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான ஊதியம் + சலுகைகள் இங்கு பணிசெய்யும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு போன்ற முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
ஐடிஐ டிரெய்னி - ஃபிட்டர் - 07 பணியிடங்கள்
ஐடிஐ டிரெய்னி - டர்னர் - 11
ஐடிஐ டிரெய்னி - மெஷினிஸ்ட் - 10
ஐடிஐ டிரெய்னி - எலக்ட்ரீசியன் - 08
ஐடிஐ டிரெய்னி - வெல்டர் - 18
அலுவலக உதவியாளர் டிரெய்னி - 46
என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி: ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து இருப்பது அவசியம். மூன்று ஆண்டுகள் அனுபவமும் அவசியம். அலுவலக உதவியாளர் டிரெய்னி பணிக்கு டிகிரி/டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் வயது உச்ச வரம்பு 32 ஆகும். எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.16,900 - 60,650 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: கணிணி வழியிலான எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. https://www.bemlindia.in/careers/current-recruitments/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எழுத்து தேர்வை பொறுத்தவரை பெங்களூரில் மட்டுமே நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் https://www.bemlindia.in/wp content/plugins/career/WCP/DATA/Writereaddata/Career/KP_S_14_2024.pdf செய்யவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications