மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சென்னை தரமணியில் பணியிடம்! 12 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் (CSIR) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் பணியமர்த்தப்படுவார்கள். 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

சிஎஸ்ஐஆர் எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இதன் கிளை உள்ளது. அந்த வகையில் சென்னையில் தரமணியில் சி எஸ் ஐஆர் அலுவலகம் உள்ளது. இதில் காலியாக உள்ள 08 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

jobs-in-csir-madras-complex-08-vacancy-how-to-apply-see-full-details-here

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (பொது) - - 01
2. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (F&A) - 02
3. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (ஸ்டோர்ஸ் & பர்ச்சேஸ்) - 01
4. ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் - 04 என மொத்தம் 08 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டண்ட் பொது பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தி டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலம் டைப்பிங் தெரிந்து இருப்பது அவசியம். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

வயது வரம்பு & சம்பளம்:

19.5.2025 அன்று தேதிப்படி 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 37,885 வழங்கப்படும். ஜூனியர் ஸ்டெனோ கிராபர் பணிக்கு மட்டும் ரூ. 25,500/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பெண்களுக்கு கட்டணம் இல்லை.விண்ணப்பிக்க வரும் 19.05.2025 கடைசி நாளாகும். https://www.csircmc.res.in- என்ற இணையதளத்தில் தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Advertisement_16042025_final_0.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+