எழும்பூர் அரசு மருத்துவமனையில் வார்டு மேனேஜர் பதவி.. மே 26 கடைசி நாள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனையில் 2 வார்டு மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டு மேலாளர் (Ward Manager). காலி பணியிடங்கள் 2 இருக்கின்றன. மாத சம்பளம் ரூ 10 ஆயிரம்.

இந்த பதவிகளுக்கு கல்வித் தொகுதி கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது இது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்படவுள்ளன.
மேலும் தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இந்த அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர் மற்றும் பேராசிரியர்
மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் மருத்துவமனை
எழும்பூர்
சென்னை- 600 008.
விண்ணப்பிக்க கடைசி நாள்- மே 26
மே 26 ஆம் தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications