பள்ளியில் வேலை பார்க்க ஆசையா! 4062 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் ஏகலைவா பள்ளியில் காலியாக 4,062 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் (EMRS) நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், முதுகலை ஆசிரியர்கள், அக்கவுண்டண்ட், டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட், உள்ளிட்ட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: பள்ளி முதல்வர் -303 (பணியிடங்கள்), அக்கவுண்டண்ட் -361, ஜூனியர் செக்கரட்டரியேட் அஸ்சிஸ்டண்ட் 759, லேப் அட்டண்ட் 373 என மொத்தம் 4062 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஆங்கிலம் (246) இந்தி (200) கணக்கு (244), வேதியியல் (169) உயிரியியல் (236) வரலாறு (185), புவியியல் (154), வணிகவியல் (140), பொருளியல் (161), கம்ப்யூட்டர் சயின்ஸ் (172) என மொத்தம் 2,226 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். பி.எட் முடித்து இருப்பது அவசியம். துறைசார்ந்த பாடப்பிரிவில் முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். அக்கவுண்டண்ட் பணியிடத்திற்கு வணிகவியல் பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் செக்கரட்டரியேட் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
டைப்பிங் திறன் அவசியம். ஆங்கிலம் என்றால் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தி என்றால் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். லேப் அட்டண்டண்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் லேப் டெக்னிக்(Laboratory techniqu) டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அல்லது அறிவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
* பள்ளி முதல்வர்: ரூ.. 78,800-2,09,200/
* முதுகலை ஆசிரியர் (PGTs) - ரூ. 47600-1,51,100/
* அக்கவுண்டண்ட்- ரூ. 35,400-1,12,400 /
* ஜூனியர் செக்கரட்டரியேட் அஸ்சிஸ்டண்ட் ரூ. 19,900-63,200
* லேப் அட்டண்ட் - ரூ. 18,000-56,900
தேர்வு முறை: கணிணி வழித்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொழித்தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறைந்தபட்சம் மதிப்பெண்கள் கட்டாயம். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 19.10.2023 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பாணையை படிக்க https://emrs.tribal.gov.in/site/Information-Bulletin.pdfஎன்ற இணையதளத்தை தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://emrs.tribal.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=332&lid=223 லிங்கை கிளிக் செய்யவும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications