வங்கியில் வேலை வேண்டுமா? 8,612 பணியிடங்கள்.. மிஸ் பண்னிடாதீங்க.. இன்றே கடைசி நாள்!
சென்னை: Probationary Officer, Clerk, Officer Scale ஆகிய 3 பிரிவுகளில் மொத்தம் 8612 பணியிடங்கள் நிரப்ப ஐபிபிஎஸ் (IBPS) சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை ஐபிபிஎஸ் அளித்தது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
இந்தியாவில் எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து பிற பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை வங்கி பணியாளர் தேர்வு அமைப்பான IBPS மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வங்கியில் காலியாக இருக்கும் சுமார் 8 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் எத்தனை: Probationary Officer, Clerk, Officer Scale ஆகிய 3 பிரிவுகளில் மொத்தம் 8612 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஆபிஸ் அசிஸ்டென்ஸ் (மல்டிபர்பஸ்) பணிக்கு 5538 பேர், ஆபிசர் ஸ்கேல் - I பணிக்கு 2485 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (அக்ரிகல்சர் ஆபிசர்) பணிக்கு 60 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(மார்க்கெட்டிங் ஆபிசர்) பணிக்கு 3 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(டிரஸ்டரி மேனேஜர்) பணிக்கு 8 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(சட்டம்) பணிக்கு 24 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (சிஏ) பணிக்கு 18 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (ஐடி) பணிக்கு 68 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (ஜெனரல் பேங்கிங் ஆபிசர்) பணிக்கு 332 பேர், ஆபிசர் ஸ்கேல் - III பணிக்கு 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி, சார்ட்டர்ட் அக்கவுண்ட், எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருப்பதோடு அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
*ஆபிசர் ஸ்கேல் - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 29,000 முதல் ரூ. 33,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
* ஆபிசர் ஸ்கேல் II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 33,000 முதல் ரூ.39,000 வரை வழங்கப்படும்
*ஆபிசர் ஸ்கேல் III பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.38,000 முதல் ரூ. 44,000 வரை வழங்கப்படும்
*ஆபிஸ் அசிஸ்டென்ட் (மல்டிபர்பஸ்) பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் ஊதியமாகா கிடைக்கும்
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான கட்டணம் ரூ.850 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 ஆம் தேதி கடைசி நாளாகும். முதலில் 21 ஆம் தேதி வரை கடைசி நாள் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றே கடைசி நாளாகும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications