இந்தியன் வங்கியில்1,500 பணியிடங்கள்.. டிகிரி முடிச்சுருக்கீங்களா.. நல்ல சான்ஸ்! அப்ளை பண்ணுங்க
சென்னை: இந்தியன் வங்கியில் 1,500 அப்ரண்டீஸ் போஸ்ட் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட தேர்வு விவரம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் வங்கியில் 1500 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விபரம்:
தமிழ்நாடு - 277
புதுவை - 09
கேரளா -44
கர்நாடகா - 42
ஆந்திரா - 82, என்ன நாடு முழுவதும் சேர்த்து மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி & வயது வரம்பு: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப் படிப்பு முடித்து இருந்தால் போதுமானது. வயது வரம்பை பொருத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் சலுகைகள் உள்ளன.
அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.. அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம், ஓ பி சி பிரிவினர் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதர சலுகைகள் எதுவும் கிடையாது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கியின் கிளையில் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்..
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போதுமான கல்வித் தகுதியும், வயது வரம்பும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒரு முறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க வரும் 31/7/2024 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் https://ibpsonline.ibps.in/ibeappjul24/ செய்யவும்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications