கடலோர காவல் படையில் வேலை.. கைநிறைய சம்பளம்.. டிப்ளமோ, பிளஸ் 2 முடிச்சவங்களுக்கு செம வாய்ப்பு
சென்னை: இந்திய கடலோர காவல் படையில் நேவிக், யான்ட்ரிக் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோர காவல் படையில் பணி செய்வது என்பது பலருக்கும் லட்சியமாகவே உள்ளது. நல்ல சம்பளம், தேசத்திற்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளிட்டவைகளால் பலரும் கடலோர காவல் படையில் வேலை செய்ய அதிகம் விரும்புகிறார்கள்.

கடலோர காவல் படையை பொறுத்தவரை காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக 260 நேவிக்குகளும், 60 யான்ட்ரிக்குகளும் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* நேவிக் (ஜெனரல் டியூட்டி): 260 பணியிடங்கள்;
(பொது- 102, பொருளாதார பிற்பட்டோர்-25, ஒபிசி-82, எஸ்சி-41, எஸ்டி-10)
* யான்ட்ரிக்: 60 பணியிடங்கள்: 60
யான்ட்ரிக்: (மெக்கானிக்கல்): 33 இடங்கள்
யான்ட்ரிக்: (எலக்ட்ரிக்கல்): 18 இடங்கள்
யான்ட்ரிக் (எலக்ட்ரானிக்ஸ்): 9 இடங்கள்
நேவிக் மற்றும் யான் ட்ரிக் பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 320 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி:
நேவிக் - பிளஸ் டூ முடித்திருக்க வெண்டும். கணிதம், இயற்பியல் பாடப்பிரிவை எடுத்து இருப்பது அவசியம்.
யான்ட்ரிக்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 முதல் 22க்குள் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 01.03.2003-க்கும் 28.2.2007க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: நேவிக்- ரூ. 21,700 (அடிப்படை சம்பளம்) பே லெவல் 3 படி இதர சலுகைகளும் உண்டு. யான்ட்ரிக்- ரூ.29,200 ( (Pay Level 5).
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு, அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழி தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க 03.07.2024 வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் ஒரு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2025adv.pdf - என்ற இணையளத்தை பக்கத்திற்கு சென்று பார்க்கவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை https://cgept.cdac.in/icgreg/candidate/login கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications