ஐஓபி வங்கியில் வேலை.. இளம் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! தமிழ் நல்லா தெரியுமா? இன்றே கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. டிகிரி கல்வி தகுதியுடன் உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. மொத்தம் 750 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில், ஆட்சேர்ப்பு பணி பெரும்பாலும் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பப்படும். எனினும், சில பணியிடங்களை நேரடியாக வங்கியே அறிவிப்பு வெளியிட்டு நிரப்பவும் செய்கிறது. அந்த வகையில்தான் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:-

Job Jobs Employment

பணியிடங்கள்: 750 பயிற்சி பணியிடங்கள் (Apprentice) நிரப்பப்படுகின்றன. மாநில வாரியாக நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு: 175
ஆந்திரா: 25
கேரளா: 40
கர்நாடகா: 30
மகராஷ்டிரா: 60
டெல்லி: 50
குஜராத்: 25
புதுவை: 22
உத்தரபிரதேசம்: 80

கல்வித் தகுதி: பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும். 01.04.2021 முதல் 01.03.2025 க்குள் பட்ட படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். ஆன்லைன் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் போது உள்ளூர் மொழித்திறன் தேர்வு நடைபெறும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் தமிழ் எழுத, படிக்க தெரிந்து இருக்க வேண்டும். அதே போல கேரளாவில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பித்தால் மலையாளம் தெரிந்து இருக்க வேண்டும். கர்நாடகா என்றால் கன்னடம் தெரிந்து இருப்பது அவசியம். இப்படி விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடயவர்கள்.

வயது வரம்பு: 01.03.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும். அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாதவராக இருப்பது அவசியம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 33 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரையும் மாற்றுத்திறனாளி என்றால் 38 வயது வரையும் விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம்: பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நகரங்கள் என்றால் மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். நகரங்கள் என்றால் மாதம் ரூ.12 ஆயிரமும், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்கள் என்றால் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.800 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் ரூ.600 கட்டணம் ஆகும். ஆன்லைன் டெஸ்ட் கொள்குறி வகையில் நடைபெறும். பொது அறிவு மற்றும் நிதி சார்ந்த கேளவிகள் 25, பொது ஆங்கிலம்; 25, ரீசனிங்: 25, கம்ப்யூட்டர் மற்றும் பாடப்பிரிவு குறித்த வினாக்கள் 25 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மெரிட் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உள்ளூர் மொழித்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள இளம் பட்டதாரிகள் மறக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.iob.in/upload/CEDocuments/FinalEmpanelmentInquiryOfficersAdvt.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+