கர்நாடக வங்கியில் வேலை.. மாதம் 64 ஆயிரம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றான கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,050 - 64,480 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித்தகுதி என்ன என்று இங்கே பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் மங்களூரை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா வங்கி செயல்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 900 வங்கி கிளைகளுடன் இந்த வங்கி செயல்படுகிறது. தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ள கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள்: கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்ஸ் (Customer Service Associates) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,050 - 64,480 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். சென்னை, டெல்லி, கொல்கத்தா, மைசூர், பெங்களூர், ஹைதராபாத், தார்வாத், ஹூப்பளி, புனே, மும்பை, சிவ்மோக்கா, கல்புர்க்கி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்டி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://karnatakabank.com/careers . விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 20.11.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2024
தேர்வு நடைபெறும் நாள்;15.12.2024.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://d3sdkw7nvdnqts.cloudfront.net/s3fs-public/2024-11/recruitment-notification---csa.pdf
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications