Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சி சுகாதார மையத்தில் வேலை.. 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் ஜாப் இருக்கு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி - பொது சுகாதாரத்துறை மருத்துவ சார் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள சுகாதார மையங்களில் நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் எத்தனை பணியிடங்கள், பணி விவரம், சம்பளம், கல்வி தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை கீழே காணலாம்.

 Jobs in Metropolitan Chennai Corporation Public Health Department, How to apply full details

பணியின் விவரம்: துணை செவிலியர் மற்றும் பேறுகால பணியாளர் (ANM), மாவட்ட ஆலோசகர் (தரம்), புரோகிராம் மற்றும் நிர்வாக உதவியாளர், சைக்காலாஜிஸ்ட், சமூக பணியாளர், மருத்துவ பணியாளர் (Multipurpose Health Worker), பாதுகாவலர் என மொத்தம் 7 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி விவரம்: ANM பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு,
அரசு அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரியில் இருந்து ANM/GNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூக பணியாளர் பணியிடத்திற்கு சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். பணி அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு பாஸ்/பெயில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf என்ற இணையதள முகவரியில் இடம் பெற்றுள்ள தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 45-வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.

சம்பளம் எவ்வளவு:
*ANM - பணிக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
*மாவட்ட ஆலோசகர் பணி: ரூ. 40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
*புரோகிராம் & நிர்வாக உதவியாளர்: ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.
*சைக்காலாஜிஸ்ட் பணி; ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
*சமூக பணியாளர்: ரூ.23,800 சம்பளம் வழங்கப்படும்.
*மருத்துவ பணியாளர்: 5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
*பாதுகாவலர்: ரூ. 6,300 சம்பளம் வழங்கப்படும்.

பிற விவரங்கள்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஒப்பந்த காலம் 11 மாதம் ஆகும். ஒரு மாதம் முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டு எப்போது வேண்டும் ஆனாலும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 29.9.2023 கடைசி நாளாகும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai-600003 என்ற முகவரிக்கு தேவையான கல்வி சான்றுகள், பணி அனுபவம் ஆகியவற்றின் நகலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பொதுசுகாதாரத்துறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 2561 9330, 044 - 2561 9209 .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+