நகராட்சி நிர்வாக காலிப்பணியிடங்கள் 2,455 ஆக அதிகரிப்பு.. என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,455 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது.

உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் (Junior Engineer) நகர திட்டமிடல் அலுவலர், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், வரைவாளர், சூப்பர்வைசர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் 1933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
கல்வித்தகுதி: இந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தனர். சிவில் மெக்கானிக்கல், இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்.சி முடித்தவர்கள் என பணிக்கேற்ப கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை அறிவிப்பில் முதலில் காலிப்பணியிடங்கள் 1933-ல் இருந்து 2104 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது 2455 ஆக அதிகரிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது தேர்வர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தேர்வு முறை எப்படி?: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29, 30- ஆகிய தேதிகளில் நடைபெறும்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை பணிகளின் தன்மைக்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக பொறியாளர் பணிகளுக்கு ரூ.1,38,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது,
உதவிப்பொறியாளர் (மாநகராட்சி); 37,700 - 1,38,500
உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்); 37,700 - 1,38,500
உதவிப்பொறியாளர் (நகராட்சி); 37,700 - 1,38,500
உதவிப்பொறியாளர் (சிவில்) ; 37,700 - 1,38,500
பணி ஆய்வாளர் பணிக்கு ரு.18,200 - 67,100 - வரை சம்பளமாக வழங்கப்படும்.
துறை வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம், எழுத்துதேர்வுக்கான பாடத்திட்டம், முழுமையாக கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் முழுமையான விவரங்களை நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications