Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கபாலீஸ்வரர் கோயிலில் வேலை.. 8 ஆம் வகுப்பு தகுதி.. 58,000 வரை சம்பளம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பங்களை நேரில் சென்றும் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. பிரபலமான இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவிலாகும். கோவிலில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்பு வெளியாகி நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் என மொத்தம் 4 விதமான பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

 Jobs in Mylapore Kapaleeswarar Temple today is the last date to apply Check details

காலிப்பணியிடங்கள்: நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், உதவி மின் பணியாளர் தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை நூலகர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் அவசியம். ஓராண்டு அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மின் உதவியாளர் பணியிடத்திற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து தொழில் பயிற்சி நிறுவனர் (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது வரம்பை பொறுத்தவரை 18 - வயது பூர்த்தியாகிருக்க வேண்டும். 45 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை நூலகர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு 18,500 - 58,600 வரை சம்பளமாக வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு 15,900 - 50,400 - வரை சம்பளமாக வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு: நூலகர் பணியிடத்திற்கு மாதம் ரூ. 18,500 முதல் ரூ. 58,600 வரை வழங்கப்படும்.

இதேபோல் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூ. 15,900 - 50,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஓட்டுனர் பணியிடத்திற்கு மாதம் ரூ. 18,500 - 58,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி மின் பணியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூ. 16,600 - ரூ. 52,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்துசமய அறநிலையத்துறை இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவத்துடன் வயது சான்றிதழ் நகல், கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 27. 01. 2024 கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணபிக்கும் திருக்கோயில் பெயர்

இணை ஆணையர் / செயல் அலுவலர்

அருள் மிகு கபாலீசுவரர் திருக்கோயில்

மயிலாப்பூர், சென்னை -4.

தேர்வு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும். இதேபோல் விண்ணப்பங்களை நேரில் சென்றும் பெற்றுக்கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+