மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. ஆரம்பமே 39,000 சம்பளம்! டிகிரி முடித்திருந்தால் போதும்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ, 39 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால், மத்திய அரசு விதிகளின் படி சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

பணி பாதுகாப்பும் நிறைந்தது என்பதால் அரசு வேலைக்காக காத்திருக்கும் தேர்வர்கள் இதுபோன்ற பொதுத்துறை நிறுவன பணிகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருகிறார்கள். இந்த சூழலில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் & கல்வி தகுதி: அசிஸ்டண்ட் பதவிகளில் காலியாக உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் 35 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. புதுவையில் 2 பணியிடங்களும் கேரளாவில் 35 பணியிடங்களும், கர்நாடகாவில் 40 பணியிடங்களும் உள்ளன.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி சலுகைகள் உண்டு. எஸ்/சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் உண்டு. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 39 ஆயிரம் ஆரம்ப சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் இரண்டு கட்ட தேர்வுகளும் நடைபெறும். பிராந்திய மொழிகளிலேயே தேர்வு எழுதலாம். முதன்மை தேர்வுக்கு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தேவையான கல்வி உள்பட இதர தகுதிகள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ. 100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 11.11.2024 கடைசி நாளாகும். முதல் நிலை தேர்வு 30.11.2024 அன்று நடைபெறும். மெயின் தேர்வு 28.12.2024 அன்றைய தினம் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://nationalinsurance.nic.co.in/recruitment/












Click it and Unblock the Notifications