தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்.. மொத்தம் 62 இடங்கள் காலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Jobs in National Water Development Authority

ஜூனியர் என்ஜினியர் (சிவில் ) -16 காலிப்பணியிடங்கள்
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இந்தி டிரான்ஸ்லேட்டர்- 01

இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிஸர்- 05

வணிகவியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு ஊதியம் மாதம் ரூ 35,400- ரூ 1,12,400

அப்பர் டிவிஷன் கிளார்க் - 12
ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோகிராபர் கிரேடு 2- 05 காலியிடங்கள்
பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஊதியம் ரூ 25,500 முதல் 81,100 ஆகும்.

லோயர் டிவிஷன் கிளார்க் - 23
பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் - 19,900- 63,200

வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் (சுருக்கெழுத்து, தட்டச்சு) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ 500. மற்றவர்கள் ரூ 840 செலுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+