நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை.. 632 பணியிடங்கள்.. என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 632 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு என்ன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. என்.எல்.சி எனப்படும் இந்த நிலக்கரி சுரங்கம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிலக்கரி சுரங்கத்தில் 632- பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
மெக்கானிக்கல் என்ஜினியரிங்: 75
எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்: 78
சிவில் என்ஜினியரிங்: 27
இன்ஸ்ட்ரமண்டேஷன் என்ஜினியரிங்: 15
கெமிக்கல் என்ஜினியரிங்: 27
மைனிங் என்ஜினியரிங்: 44
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் - 47
எலக்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என்ஜினியரிங்- 05
பார்மசி - 14
டெக்னிஷியன் (டிப்ளமோ) அப்ரண்டீஸ்
மெக்கானிக்கல் என்ஜினியரிங்: 95
எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்: 94
சிவில் என்ஜினியரிங் - 49
இன்ஸ்ட்ருமண்டேஷன் என்ஜினியரிங்: 09
மைனிங் என் ஜினியரிங்: 25
கம்ப்யூட்டர் சயின்ஸ் என் ஜினியரிங்: 38
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என்ஜினியரிங்: 08
என மொத்தம் 632 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: இந்த அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும். அதேபோல், டிப்ளமோ பிரிவிலும் இதே தகுதி அவசியம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை என்.எல்.சி அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு டிகிரி மற்றும் டிப்ளமோ பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 19.2.2024 அன்று என்.எல்.எசி இணையதளத்தில் வெளியாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் என்.எல்.சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 18.01.2024 தொடங்கி 31.01.2024 - வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. இணையதளம் மூலமாக விண்ணப்பித்த பிறகு அதை பிரிண்ட் எடுத்து தபால் மூலம் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Learning and Development Centre,
N.L.C India Limited.
Neyveli – 607 803.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு மட்டுமே பயிற்சி காலம் ஆகும். பட்டப்படிப்பு தகுதிக்கு மாதம் 15028-ம், டிப்ளமோ தகுதிக்கு மாதம் ரூ.12,524ம் வழங்கப்படும். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20-GAT%20&TAT-2023-24.pdf கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications