நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை.. 803 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு அறிவிப்பு மற்றும் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சியில் 803 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. மெடிக்கல் லேப் டெக்னீசியன் - 04
2. ஃபிட்டர் - 125
3. டர்னர் - 50
4. மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 122
5. எலக்ட்ரீசியன் - 172
6. வயர்மேன் - 124
7. மெக்கானிக் (டீசல்) - 10
8. மெக்கானிக் (டிராக்டர்) - 05
9. கார்பெண்டர் - 05
10. பிளம்பர் - 05
11. ஸ்டெனோகிராபர் - 20
12. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் - 122 என மொத்தம் 803 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். மெடிக்கல் லேப் டெக்னிஷியன் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி ( பயலாஜி/ சயின்ஸ் குரூப்) பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் தொழிற்பயிற்சி (ஐடிஐ) முடித்து இருக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 14 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.10,019/ வழங்கப்படும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. பயிற்சி காலம் ஓராண்டு ஆகும்.
தேர்வு முறை: மெரிட் அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது, அதிகபட்ச மதிப்பெண்கள் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு பயிற்சி பணியிடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?: தேர்வுக்கு https://www.nlcindia.in என்ற இணையதளம் வாயிலாக விண்னப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 06.11.2024- கடைசி நாளாகும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய முகவரி:
Office of The General Manager,
Learning and Development Centre,
Block-20, NLC India Limited.
Neyveli - 607 803.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.nlcindia.in/new_website/careers/TA_Adv_22102024.pdf
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications