ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. என்ன ரெடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பெட்டி தொழிற்சாலையில் 550 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் கோச் ஃபேக்டரியில் (RCF) பயிற்சி பணியிடங்கள் நிரப்படுகின்றன. மொத்தம் 550 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Jobs in Railway Coaching Factory 550 apprentice post how to apply full details

பணியிடங்கள் விவரம்: ஃபிட்டர் (200 பணியிடம்), வெல்டர் (200), மெகானிஸ்ட் (03), பெயிண்டர் (10), கார்பெண்டர் (03), எலக்ட்ரிஷியன் (38), ஏசி & Ref மெக்கானிக் 08 என மொத்தம் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: துறைசார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிபெண்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து மெரிட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு: 15 வயது பூர்த்தியானவர்களும் 24 வயது நிரம்பாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 03 ஆண்டுகளுக்கும் எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தமிழக போலீஸ் ரிப்போர்ட்டர் வேலை.. நேரடி நியமனம்.. +2 தகுதி தான்! செம சான்ஸ்.. உடனே அப்ளை பண்ணுங்க


விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். 09.04.2024 அன்று விண்ணப்பிபதற்கான லிங்க் ஆக்டிவேட் ஆகும். 24 மணி நேரம் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு விண்ணப்பிக்க இயலாது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அப்ரெண்டீஸ் விதிகளின் படி ஒப்பந்தம் போடப்படும். பயிற்சி காலம் முடிந்த பிறகு பணியில் தொடர முடியாது.

ஊதியம் உள்ளிட்டவை விதிகளின் படி வழங்கப்படும். தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு தங்கும் இடம் எதுவும் வழங்கப்படாது. சொந்த ஏற்பாட்டின் பேரிலேயே தங்கி கொள்ள வேண்டும். www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிகும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கோள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://rcf.indianrailways.gov.in/uploads/files/act-app/act24-25.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+