மத்திய அரசு வங்கியில் வேலை! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. யார் விண்ணப்பிக்கலாம்? இதோ விவரம்
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) -யில் காலியாக உள்ள 72 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கை நிறைய சம்பளங்கள் கிடைக்கும் இந்த வங்கி பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்க்லாம்.
மத்திய அரசின் தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) லக்னோவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சிறு, குறு கடன்கள் வழங்கும் நிதி நிறுவனங்களை உரிமத்தை வழங்குதல் மற்றும் ஒழுங்கு முறை அமைப்பாக இந்த வங்கி செயல்படுகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த வங்கியின் அலுவலகம் உள்ளது.

இந்த சிட்பி வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்ப்போம்.
பணியிடங்கள் விவரம்:
உதவி மேலாளர் கிரேடு ஏ - 50 காலிப்பணியிடங்கள்
மேனேஜர் கிரேட் பி - 10
மேனேஜர் கிரேட் பி (லீகல்) - 6
மேனேஜர் கிரேட் பி (ஐடி) - 06
என மொத்தம் 72 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். உதவி மேலாளர் (பொது) பணிக்கு வணிகவியல்/ பொருளாதாரம்/கணிதம் / வணிகநிர்வாகவியல் பாடப்பிரிவில், 60 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய என்ஜினியரிங் பட்டம் என இதில் ஏதாவது ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சிஏ, சிஎஸ் போன்ற கணக்கியல் தொடர்பான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் பணிக்கு 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு 25 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசின் விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளம் எவ்வளவு?:
உதவி மேலாளர் (ஏஎம்) கிரேடு 'ஏ’ – ரூ.44,500 – 89,150/-
மேலாளர் கிரேடு 'பி’ – ரூ.55,200 – 99,750/-
மேலாளர் கிரேடு 'பி’ – ரூ.55,200 – 99,750/-
மேலாளர் கிரேடு 'பி’ – தகவல் தொழில்நுட்பம் (IT) – ரூ.5,5200 – 99,750/-
தேர்வு முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெறும். இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,100- செலுத்த வேண்டும். எஸ்.டி/ எஸ்.சி,மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 தெர்வு கட்டணமாகும்.
தேர்வர்கள் (https://www.sidbi.in/) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 09.11.2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.12.2024 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.sidbi.in/head/uploads/career_document/SIDBI-DETAILED-WEB-ADVT-08112024.pdf
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications