தெற்கு ரயில்வேயில் வேலை.. 2,860 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தெற்கு ரயில்வேயில் 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்..
இந்திய ரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயில் காலியாக உள்ள 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் -1357 (பணியிடங்கள்), மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 679, சிக்னல் & டெலிகாம் பணிமனை; 824 என 2,860 பணியிடங்கள் மண்டல வாரியாக நிரப்பபடுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஃபிட்டர், டர்னர், வெல்டர், வெல்டர் (ஜி&இ), மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பெண்டர், வயர்மேன், பிளம்பர், டீசல் மெக்கானிக், COPA உள்ளிட்ட பணிகளில் அப்ரெண்டீஸ் டிரெயினிங் அளிக்கப்படும்.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு, துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த்ந பணியிடங்களுக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள்... சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. இது பற்றிய விவரங்களை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் போதுமான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ரயில்வே தேர்வு வாரிய விதிகளின்படி ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒப்பந்தப்படி அப்ரெண்டீஸ் பணிக்காலம் முடிந்த பிறகு பயிற்சியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 28.02.2024 கடைசி நாளாகும். அதாவது இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணபித்து விடுங்கள்.. தேர்வு அறிவிப்பை படிக்க இந்த இணையதள லிங்கை கிளிக் https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications