செம! எஸ்.பி.ஐ வங்கியில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. கை நிறைய சம்பளம்.. விண்ணப்பிக்க தயாரா?
சென்னை: எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள 46 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாளர் (பாதுகாப்பு/மேனேஜர் (பாதுகாப்பு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 42 பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி: துணை மேலாளர் (செக்யூரிடி), பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். அதோடு, பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றிய முன் அனுபமும் இந்த பணிக்கு அவசியம் ஆகும். மேனேஜர் (செக்யூரிட்டி) பணிக்கு இந்திய ராணுவம் அல்லது இந்திய கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றியதற்கான அனுபவம் தேவை. கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்டவை குறித்த தெளிவான தகவல்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 48,170 - 69,810 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்து தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் வரும் 27. 11. 2023 ஆகும். தேர்வு குறித்த அறிவிப்பாணையை தெரிந்து கொள்ள https://sbi.co.in/documents/77530/36548767/061123-ADVERTISEMENT+CRPD-SCO-2023-24-26.pdf/120155d6-dbcd-35dd-9ac1-e36b56b68d98?t=1699261822471 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications