தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை.. என்ஜினீயரிங் முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 20 எஸ்.ஓ (Specialist Officers - IT Specialist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர் ( 04 பணியிடங்கள்), நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் ( 04), டேடாபேஸ் அட்மின்ஸ்ட்ரேட்டர் (04), அப்ளிகேஷன் டெவலப்பர் ( 08) என மொத்தம் 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பி.இ / பி.டெக் கம்யூட்டர் சயின்ஸ் / ஐடி / பிசிஏ அல்லது எம்.இ / எம்.டெக் / எம்.சி.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை அங்கீகரிகப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து முடித்து இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ப துறை சார்ந்த அனுபவமும் பட்டப்படிப்பும் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை தேர்வு அறிப்பாணையில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை அனைத்து பணியிடங்களுக்கு 31/ 08 / 2023 அன்றைய தேதிப்படி 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை ஐபிபிஎஸ் விதிமுறைகளின் படி தேர்வு நடைபெறும். ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருக்கும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். கட் ஆஃப் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபட்டவர்கள் நேர்முகத்தேர்வு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு மாதம் ரூ.1,05,904 சம்பளமாக கிடைக்கும். ஆண்டுக்கு ரூ. 12,70,848.00 கிடைக்கும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். சென்னை, திருநெல்வேலி, வேலூர், மதுரை, ஐதரபாத், மும்பை, கோவை, திருச்சி, சேலம், பெங்களூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 06.11.2023 கடைசி நாளாகும். தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும். நேர்முகத்தேர்வு டிசம்பர் /ஜனவரியில் நடைபெறும். பணி ஒதுக்கீடு ஜனவரியில் நடைபெறும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.tmbnet.in/tmb_careers/doc/IT%20Specialist.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். தேர்வுக்க்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/tmblposep23/ என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications