இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு.. 45 ஆயிரம் வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் கணிணி வல்லுநர், தொழில் நுட்ப வல்லுனர் / மின்படியாக்க பணியாளர் என காலியாக உள்ள 8 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை அறநிலையத்துறை செய்து வருகிறது. இந்த நிலையில், அறநிலையத்துறையில் காலியாக உள்ள 8 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: துணை ஆசிரியர்கள் (01 பணியிடம்), சுவடியியல் வல்லுநர், கணிணி வல்லுநர், தொழில் நுட்ப வல்லுனர்/மின்படியாக்க பணியாளர், தொல்லியல்/தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர், மரபு ஓவிய புனரமைப்பாளர், ஆய்வு கூட உதவியாளர், ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் என மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: துணை ஆசிரியர் பணிக்கு எம்.ஏ தமிழ்/இதழியல்/ தொல்லியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் அவசியம். 50-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சுவடியியல் வல்லுநர்: தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் ஓலைச்சுவடி பட்டய சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். சுவடி நூலாக்க பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
கணிணி வல்லுநர்: பதவிக்கு ஏதாவது ஒரு பட்டபடிப்பு/ ஓர் ஆண்டு சுவடியியல் பட்டயப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். டிடிபி & indesign/photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வுக்கூட உதவியாளர் பணிக்கு அறிவியல் பாடப்பிரிவு எடுத்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழுமையான அறிவிப்புகளை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பாணை லிங்க்-க்கிற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
உதவி ஆசிரியர் - ரூ.45,000/-
சுவடி வல்லுனர் - ரூ.40,000/-
கணினி வல்லுநர் - ரூ.30,000/-
தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.25,000/-
தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் - ரூ. 40,000/-
மரபு ஓவிய புனரமைப்பாளர் - ரூ. 35,000/-
ஆய்வு கூட உதவியாளர் - ரூ. 20,000/-
ஆய்வு கூடத்தில் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் (வேதியியல்) - ரூ.15,000/-
தொகுதிப்பூதியமாக சம்பளம் கொடுக்கபப்டும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 05.03.2024
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
post Box No:3304
The Post Master,
Nungabankkam MDO
Habibulla Road, (T.Nagar North post office Upstairs)
Nungabakkam,
Chennai-600034
தேர்வு அறிவிப்பினை படிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications