கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.62,000ல் பணி! எழுத்து தேர்வு கிடையாது! விண்ணப்ப தேதி முடிய போகுது
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ. 62 ஆயிரமும் குறைந்தபட்சமாக ரூ.31 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது. இங்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதுபற்றிய முக்கிய விவரங்கள் வருமாறு:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நர்ஸ், டெக்னீசியன் என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நர்ஸ் பணிக்கு 8 பேரும், டெக்னீசியன் பணிக்கு ஒருவரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு நாளை மறுநாள் (ஜூன் 24) கடைசிநாளாகும்.
மாத ஊதியமாக நர்சுக்கு ரூ.62,578, டெக்னீசியன் பணிக்கு ரூ.31,490 வழங்கப்பட உள்ளது. நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12, டிப்ளமோ நர்சிங், பிஎஸ்சி நர்சிங் படிப்பை மடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பணி பெற விரும்புபவர்கள் 10, 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் பணிக்கும் விண்ணப்பம் செய்பவர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து [email protected] அனுப்ப ஜூன் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணக்கட்டணம் கிடையாது. மேலும், விண்ணப்பத்தாரர்கள் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்க்காணல் கல்பாக்கம் General Services Organisation Annex Building-ல் நடைபெற உள்ளது. நர்ஸ் பணிக்கான நேர்க்காணல் 29.06.2022 மற்றும் 30.06.2022ல் நடைபெற உள்ளது. டெக்னீசியன் பணிக்கான நேர்க்காணல் 01.07.2022 காலை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ. 62 ஆயிரமும் குறைந்தபட்சமாக ரூ.31 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள http://www.igcar.gov.in/gso/recruitment/Advt02_2022.pdf கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை http://www.igcar.gov.in/ கிளிக் செய்யும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications