கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! தட்டி தூக்குங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் என மொத்தம் 200 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் இயங்கி வருகிறது. மத்திய அணுசக்தி அமைச்சகத்தின் செயல்படும் இந்த அணு மின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:-

Kalpakkam Nuclear Power Station Job vaccancies 200 apprentice posts ITI Graduates can apply

பணியிடங்கள்:

அப்ரெண்டீஸ் - 200 பணியிடங்கள்

ஃபிட்டர் - 46
டர்னர் - 07
மெஷினிஸ்ட் - 10
எலக்ட்ரீஷியன் - 22
மெக்கானிக்கல் மெஷின் டூல் மெயின்டனன்ஸ் - 01
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15

இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 18
டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) - 12
மெக்கானிக் ரெஃப்ரிஜரேஷன் & ஏர் கண்டிஷனிங் - 09
பிளம்பர் - 02
வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) - 14
ஹார்டிகல்ச்சர் அசிஸ்டண்ட் - 03

வுட் வொர்க் டெக்னீஷியன்/கார்பெண்டர் - 04
மேசன் / சிவில் மிஸ்ட்ரி - 04
புக் பைண்டர் - 01
PASAA (புரோகிராமிங் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டண்ட்) - 19
ஃபோட்டோகிராஃபி - 01
பிராசஸ் பிளான்ட் ஆபரேட்டர் - 12

கல்வித் தகுதி & வயது வரம்பு:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். 18 வயது முதல் 24 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பயிற்சி பணியிடங்கள் என்பதால் தற்காலிக பணியாகும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 24 என்றாலும் அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் தரப்படும்.

சம்பளம் எவ்வளவு?:

ஐடிஐ இரண்டு ஆண்டு கால பணிக்கு - மாதம் ரூ.11,040
ஓராண்டு கால ஒப்பந்த பணிக்கு - ரூ.10,560/-

தேர்வு முறை:

மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 20.07.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.08.2026 ஆகும்.

அதிகாரப்பூர்வை தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.igcar.gov.in/recruit/IGCAR_03_2026_Engagement_of_Trade_Apprentice_bilingual.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+