நகராட்சி நிர்வாக துறையில் வேலை.. 2455 பணியிடங்கள்! தேதி முடிய போகுது.. செம சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள 2,455 காலிப்பணியிடங்களை நிரபுவதற்கான அறிவிப்பு வெளியாகியது. நாளை மறுநாள் தான் கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி 1,933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது.

Last date reminder Jobs in Municipal Administration water Supply Department 2 455 Vacancy

காலிப்பணியிடங்கள்: உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் (Junior Engineer) நகர திட்டமிடல் அலுவலர், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், வரைவாளர், சூப்பர்வைசர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகள் என மொத்தம் 1933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியனது. இதன் பின்னர் பணியிடங்கள் 1933-ல் இருந்து 2104 ஆக உயர்த்தப்பட்டது. அதனைதொடர்ந்து மீண்டும் 2,455 ஆக பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்தது.

கல்வித்தகுதி: சிவில் மெக்கானிக்கல், இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்.சி முடித்தவர்கள் என பணிக்கேற்ப கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முறை எப்படி?: தகுதியான விண்ணப்பதார்ர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29, 30- ஆகிய தேதிகளில் நடைபெறும்.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை பணிகளின் தன்மைக்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக பொறியாளர் பணிகளுக்கு ரூ.1,38,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது,
உதவிப்பொறியாளர் (மாநகராட்சி); 37,700 - 1,38,500
உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்); 37,700 - 1,38,500
உதவிப்பொறியாளர் (நகராட்சி); 37,700 - 1,38,500
உதவிப்பொறியாளர் (சிவில்) ; 37,700 - 1,38,500
பணி ஆய்வாளர் பணிக்கு ரு.18,200 - 67,100 - வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

துறை வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம், எழுத்துதேர்வுககன பாடத்திட்டம், முழுமையாக கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் முழுமையான விவரங்களை நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+