‛‛வொர்க் ஃப்ரம் ஹோம்’’.. வீட்டில் இருந்தே வேலை.. அழைக்கும் முன்னணி ஐடி நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து வேலையை பெறலாம் .
Liventus.. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளை வழங்கி வருகிறது.
பெங்களூரிலும் இந்த நிறுவனத்தின் கிளை உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி டேட்டா இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பபட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜாவா ப்ரோகிராமிங்கின், சாப்ட்வேர் டெஸ்ட்டிங் கான்செப்ட்டுகளின் அடிப்படை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஸ்ட்ராங் அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். செகண்ட்ஷிப்ட் மற்றும் இரவு பணி செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
டேட்டா என்ஜினியர் பிரிவில் பணி அனுபவம் அல்லது QA மற்றும் டெஸ்ட் மெத்தடாலஜிஸ் சான்றிதழ் அல்லது ISTQB சான்றிதழ் அல்லது இன்டன்ஷிப், அல்லது சாப்ட்வேர் டெஸ்ட்டிங் படிப்புகளை முடித்திருந்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ்பாயிண்டாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தற்போதைய அறிவிப்பில் மாதசம்பளம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் கூட இந்த பணிக்கு பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
அதோடு ஊழியர்களுக்கு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஜ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிரப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். சந்தேகம் இருப்பின் 804124 9790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்













Click it and Unblock the Notifications