‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. டிசைனிங் தெரிந்தாலே போதும்.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Liventus-ல் வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெங்களூர் ஜேபி நகரில் லிவென்டஸ் (Liventus) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது.

it jobs job jobs career careers

குறிப்பாக Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி லிவென்டஸ் நிறுவனத்தில் Ul/UX Designer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அல்லது Ul/UX Designer-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டிசைன் தொடர்பான புதிய தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

Adobe XD அல்லது Figma மற்றும் Adobe Creative Suite உள்ளிட்டவற்றில் நிபுணத்துவத்துடன் இருக்க வேண்டும். மேலும் எச்டிஎம் மற்றும் சிஎஸ்எஸ் உள்ளிட்டவை தொடர்பான அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' அடிப்படையில் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் போது திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

அதோடு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஜ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிர்ந்து அளிக்கப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+