சென்னையில் IT வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லுமெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சென்னை கிளையில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதி உள்பட பிற விவரங்கள் வருமாறு:
அமெரிக்காவின் டெக்சாஸின் பிளானோவை தலைமையிடமாகக் கொண்ட லுமெல் டெக்னாலஜிஸ்(Lumel Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் டெவலப்மென்ட் சென்டர் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

சென்னை பெருங்குடியில் உள்ள குளோபல் இன்ஃபோசிட்டி டெக் பார்க்கில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் லுமெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சீனியர் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர் (ரியாக்ட்.ஜேஎஸ்) (Senior Front End Developer - React.JS) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்மென்ட் (ரியாக்ட் ஒன்லி) அனுபவம் கொண்டிருக்க வேண்டும். React.JS மற்றும் TypeScript-ல் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட் (ES6), DOM Manipulation உள்ளிட்டவற்றில் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.
அதேபோல் ஸ்டேட் மேனேஜ்மென்ட் டூல்ஸ்களாக இருக்கும் Redux, Zustand அல்லது Context API உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். RESTful API Integration மற்றும் Asynchronous டேட்டா ஹேண்ட்டிலிங் உள்ளிட்டவை பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் Git-ல் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுவதிர data visualization libraries-களாக இருக்கும் Recharsts, D3.js, Chart.js உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். யூனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க்ஸ்களான Jest, React Testing Library உள்ளிட்டவற்றில் கைதேர்ந்து இருக்க வேண்டும். மேலும் CI/CD Pipelines (GitHub Actions, Azure DevOps, Jenkins) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவிற்கான தேதி, நேரம் உள்பட பிற விவரங்கள் தெரிவிக்கப்படும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பணிக்கு தேர்வாகும் நபர்கள் அடுத்த 15 நாட்களில் சேர தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications