குரூப் 1 தேர்வு... டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.. போட்ட அதிரடி உத்தரவு
மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிகளில் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த தமிழ் வழி சான்றிதழ்களை ஆய்வு செய்ய தாமதம் ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் வழங்கிய பட்டியல் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019-ஆம் நடத்திய குரூப் 1 தோ்வில் தொலை நிலைக் கல்வியில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கியது. இதனை தொலைநிலைக் கல்வியில் படித்தவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம் ஆகும்.

இதுதொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றவில்லை. எனவே அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமா்வு திங்கள்கிழமை அன்று விசாரித்த போது கூறுகையில், கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை வழங்கி, பணியில் சோ்ந்தவா்களின் பெயா்ப் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வழங்கி இருக்கிறது. இந்தச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கில் யாா் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அவா்களும் இந்த வழக்கில் சோ்க்கப்படுவாா்கள் என்று உத்தரவிட்டனர்.. தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் வழங்கிய பட்டியல் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
முன்னதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபிட்ச துர்கா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் கடந்த மார்ச் 28ம் தேதி 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய குரூப் I தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
அதில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், சில பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது அவை கிடைமட்ட (horizontal reservation) ஒதுக்கீட்டில் இல்லாமல், செங்குத்து இடஒதுக்கீடாக செய்யப்பட்டிருந்து. அதேபோல் குரூப்-1 தகுதி பட்டியலிலும் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் டிஎன்பிஎஸ்சி உத்தரவுகளை முறையாக நடைமுறைப் படுத்தவில்லை. இதனால் இட ஒதுக்கீட்டு நடைமுறையின் முழு பயனும் எங்களுக்கு கிடைப்பதில்லை.
இதில், பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் அதற்குறிய மதிப்பெண் பெறாமல், தமிழ்வழியில் பயின்று குறைவான மதிப்பெண் பெற்றவர்களை வைப்பது தவறு ஆகும். இதேபோல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியை தமிழ் வழியில் பயின்ற பட்டியல் இனத்தவர்கான இட ஒதுக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இது தவறு. இது போல பணியிட இட ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் நடந்திருக்கிறது. எனவே குருப் 1 அறிவிப்பில் பணியிடங்களில் செய்த இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விஜயகுமார், " வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications