டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. மதுரை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலை.. அடுத்த வாரம் இண்டர்வியூ!
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு அடுத்த வாரம் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரின் சொந்த நிறுவமனான எச்சிஎல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணி பற்றிய விபரம் வருமாறு:
மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முதல் கல்லூரி வரை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர்கள் ஜாவா ஃபுல் ஸ்டாக் (Java Full Stack), கோர் ஜாவா (Core Java), Oracle PlsqI, SAP ABAP, .Net Full Stack மற்றும் ஆட்டோமேஷன் டெஸ்டர்ஸ் (Automation Testers) உள்ளிட்டவற்றில் திறமை கொண்டிருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பத்தாரர்ளுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்தால் அது கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத, ஆண்டு சம்பளம் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பத்தாரர்கள் திறமை, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படுவதோடு, அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு 2 கட்டங்களாக இண்டர்வியூ இருக்கும். முதலில் ஆன்லைன் டெக்னிக்கல் அசஸ்மென்ட் (ஹேக்கர் ரேங்க்), 2வதாக Managerial Discussion என்பது இருக்கும். இதில் தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஹைபிரிட் (Hybrid) வகை பணியாகும்.
இந்த பணிக்கு நாளை மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் இண்டர்வியூ இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது இண்டர்வியூ என்பது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் இண்டர்வியூவுக்கான தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான விபரங்கள் முறையாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications