ரூ.55,900 வரை மாதசம்பளம்! 10, ஐடிஐ, டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! அழைக்கும் எம்இசிஎல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கனிம ஆய்வு மற்றும் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.55,900 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய கனிமவளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கனிம ஆய்வு மற்றும் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனம் (Mineral Exploration And Consultacy Limited) செயல்பட்டு வருகிறது.

MECL recruitment 2023 for various post including Accountants

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: மத்திய அரசின் கனிம ஆய்வு மற்றும் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுன்டென்ட் பணிக்கு 6 பேர், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கு ஒருவர், டெக்னீசியன் (சர்வே மற்றும் டிராப்ட்மேன்) பணிக்கு 8 பேர், டெக்னீசியன் (சாம்ப்ளிங்) பணிக்கு 11 பேர், டெக்னீசியன் (லேபோராட்டரி) பணிக்கு 6 பேர், அசிஸ்டென்ட் (மினரல்ஸ்) பணிக்கு 5 பேர், அசிஸ்டென்ட் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு 6 பேர், அசிஸ்டென்ட் (எச்ஆர்) பணிக்கு 8 பேர், அசிஸ்டென்ட் (ஹிந்தி), எலக்ட்ரிசியன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 21.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்விதகுதி: அக்கவுண்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரியுடன் சிஏ/ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும். ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்பை ஹிந்தியில் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் (சர்வே மற்றும் டிராப்ட்மேன்) பணிக்கு 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ பிரிவில் சர்வே மற்றும் டிராப்ட்மேன்(சிவில்) முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன் (சாம்ப்ளிங்) பணிக்கு பிஎஸ்சி டிகிரியை டிரில்கோர்/மைன் சாம்பிளிங் படிப்பையும், டெக்னீசியன் (லேபோராட்டரி) பணிக்கு பிஎஸ்சி மெகிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜியாலஜி படிப்பையும், அசிஸ்டென்ட் (மெட்டிரீயல்ஸ்) பணிக்கு பிஎஸ்சி கணிதம், பிகாம் முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தை டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இதுதவிர அசிஸ்டென்ட் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு பிகாம், அசிஸ்டென்ட் (எச்ஆர்) பணிக்கு பிஏ, பி.காம், பிபிஏ, பிஎஸ்சி, பிஎஸ்டபிள்யூ, படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தை டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் (ஹிந்தி) பணிக்கு ஹிந்தி ஆங்கிலத்தில் டிகிரி முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 30 வார்த்தை டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். எலக்ட்ரிசியன் பணிக்கு 10ம் வகுப்பு அல்லத ஐடிஐ(எலக்ட்ரிக்கல்) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாதசம்பளம்: அக்கவுண்டென்ட், ஹிந்தி டிரான்லேட்டர் பணிக்கு மாதம் ரூ.22,900 முதல் ரூ.55,900 வரையும், டெக்னீசியன், அசிஸ்டென்ட், எலக்ட்ரிசியன் பணிக்கு மாதம் ரூ.20,200 முதல் ரூ.49,300 வரையும் மாதசம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 13ம் தேதிக்குள் www.mecl.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், துறை சார்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் எழத்து தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+