வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. ஐடி நிறுவனம் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையிலான ஆட்களை ஐடி நிறுவனம் தேடி வருகிறது. இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் வேலை செய்வது கனவாக உள்ளது. அதிலும் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்ய ஒரு தரப்பினர் விரும்புகின்றனர்.

it jobs job jobs

ஆனால் இப்போது பெரும்பாலான நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை குறைத்துவிட்டன. ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைத்து தான் ஐடி நிறுவனங்கள் வேலை வாங்குகின்றன.

இருப்பினும் கூட சில நிறுவனங்களில் இன்னும் Work From Home வாய்ப்பை தங்கள் பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வகையில் செயல்பட்டு வரும் நிறுவனம் தான் Naptha. இந்த நிறுவனம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர வெளிநாடுகளில் பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் Naptha ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் (Intern) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்/எம்எஸ் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். புரோகிராமிங் ஸ்கில்ஸ் இருப்பதோடு குறிப்பாக பைத்தான் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் ஏஎல்/எம்எல் கான்செப்ட் பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிராக்டீஸில் அனுபவம் இருக்க வேண்டும். தனியாக பணியாற்றும் திறமை இருப்பதோடு, புதிய விஷயங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.

மேலும் ஏஐ பிரேம்வொர்க்ஸ் அல்லது டூல்ஸில் அனுபுவம் கொண்டிருக்க வேண்டும். டெவலப்பர் டூல்ஸில் அனுபவம் இருப்பதோடு, AI Infrastucture-ல் ஆர்வம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அலுவலகம் செல்ல வேண்டாம். 12 முதல் 16 மாதங்கள் வரை இன்டர்ன் பணி வழங்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய விபரம் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதோடு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிறுவனம் நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும். இங்கு இன்டர்ன் முடிப்போருக்கு மீண்டும் பணி என்பது வழங்கப்படும்.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே விண்ணப்பத்துக்கான காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+