'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தின் கதாநாயகன்.. நடிகர் சாம் நீல் காலமானார்! கண்ணீரில் மூழ்கிய ஹாலிவுட்!
நியூயார்க்: டைனோசர்கள் என்று ஒரு இனம் இந்த உலகத்தில் வாழ்ந்தது என்பதை, புத்தகங்களில் படித்து தெரிந்துக்கொண்டவர்களை விட, 'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தை பார்த்து தெரிந்துக்கொண்டவர்கள்தான் அதிகம். அப்படி நமக்கெல்லாம் டைனோசர்களை அறிமுகப்படுத்திய, ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் கதாநாயகன் சாம் நீல் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று அவர் உயிரிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தார். இப்படி இருக்கையில் திடீரென அவர் உயிரிழந்தார்.

கடந்த 1947ம் ஆண்டு வட அயர்லாந்தில் ஓமாக் நகரில் பிறந்த சாம் நீல், பின் நாட்களில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். இங்கிருந்துதான் அவரது திரைப்பட வாழ்க்கை தொடங்கியது. திரைப்படத்துறைக்கு வந்த இவருக்கு 'ஸ்லீப்பிங் டாக்ஸ்' என்கிற திரைப்படம் இவருக்கு திருபுமுணையாக அமைந்தது. அதைத்தொடர்ந்துதான் இவர் 1993ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர். ஆலன் கிராண்ட் என்கிற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர், டைனோசர்களை பார்த்து ஆச்சரியப்படும் சீன்.. நாமே நேரடியாக டைனோசர்களை பார்த்து ஆச்சரியப்படுவதை போல அவ்வளவு ரியாலிட்டிக்காக இருக்கும்.
இந்த திரைப்படம் தவிர மேலும் சில அசத்தலான படங்களிலும் தனது தனிச்சிறப்பு நடிப்பை சாம் நீல் வெளி காட்டியிருந்தார். குறிப்பாக தி பியானோ திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்று கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
