Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஸ் பண்ணாதீங்க! 10ம் வகுப்பு போதும்! டிரைவர் வேலை ரெடியா இருக்கு! அதுவும் மத்திய அரசு நிறுவனத்தில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதசம்பளமாக ரூ.63,200 வரை பெற முடியும்.

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தன்னிச்சையாக என்ஐஇஎல்ஐடி எனும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

National Institute of Electronics and Information Technology Recruitment 2023 for Staff Car Driver

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஸ்டாப் கார் டிரைவர் பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்யும்போதே எந்த பகுதியில் வேலை வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதாவது தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பகுதகிளில் எந்த இடத்தில் வேலை வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு. முன்னாள் படை வீரர்களுக்கு அரசு விதிகள்படி தளர்வு வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருப்பதோடு டிரைவிங் தொழிலில் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 ஊதியமாக கிடைக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்குள் ஆன்லைனில் https://recruit-delhi.nielit.gov.in மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஓஎம்ஆர் ஷீட் மூலம் நடக்கும் எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் என்பது https://recruit-delhi.nielit.gov.in இணையதளத்தில் உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+