பென்சன் முறையில்.. இன்னும் 10 நாட்களில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றம்.. வெளியான அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு சாரா தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) சந்தாதாரர்கள் அக்டோபர் 1, 2025 முதல், ஒரே ஒரு NPS திட்டத்தில் தங்கள் நிதியில் 100% வரை ஈக்விட்டி பங்குகளுக்கு ஒதுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வகைத் திட்டக் கட்டமைப்பு (MSF) மூலம், அரசு ஊழியர் அல்லாத NPS சந்தாதாரர்கள், பல பதிவு மேலாண்மை முகமைகளின் (CAMS, Protean மற்றும் KFintech போன்றவை) கீழ் ஒரே PRAN (நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்) மூலம் பல திட்டங்களைப் பெற முடியும்.

jobs job old pension scheme pension

முன்னதாக, ஒவ்வொரு அடுக்குக்கும், ஒவ்வொரு பதிவு மேலாண்மை முகமைக்கும் ஒரு திட்டம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவு மேலாண்மை முகமைகளில் சந்தாதாரர்கள் வைத்திருக்கும் இந்தக் கணக்குகளை PAN எண் மூலமாகவும், நியமிக்கப்பட்ட பதிவு மேலாண்மை முகமை வழங்கும் வருடாந்திர அறிக்கை மூலமாகவும் கணக்கு ஒருங்கிணைப்பு அமைப்பு மூலம் அணுகலாம் என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.

புதிய ஒற்றை ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme - UPS)

ஏற்கனவே இந்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒற்றை ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme - UPS) தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (National Pension System - NPS) கீழ் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்த இத்திட்டம், ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய மாதாந்திரப் பலன்களை உறுதி செய்கிறது.

புதிய UPS விதிகள், அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றிய தெளிவான புரிதலை அளிக்கும். நேற்று இரவு வெளியான சுற்றறிக்கையில், அரசு இந்தத் திட்டத்திற்கான விதிகளைத் தெரிவித்துள்ளது. இத்திட்டம், ஓய்வு பெற்ற பிறகு உறுதியான மாதாந்திரப் பலனைப் பெற வழிவகுக்கிறது.

அடிப்படையாக, UPS ஒரு நிதி அடிப்படையிலான பலன் வழங்கும் அமைப்பாகும். இதில், ஊழியர் மற்றும் மத்திய அரசு ஆகியோரிடமிருந்து செலுத்தப்படும் பங்களிப்புகள் முறையாகவும், சரியான நேரத்திலும் சேகரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திரப் பலன்கள் வழங்கப்படுகின்றன.

புதிய விதிகள், மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றிய தெளிவைக் கொண்டுவரும். NPS மற்றும் UPS ஆகிய இரு திட்டங்களுக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. NPS பங்கு மற்றும் கடன் சந்தை செயல்பாடுகளைச் சார்ந்து இயங்குகிறது.

சமீபத்தில் அமலுக்கு வந்த யூனிஃபைட் பென்ஷன் திட்டம் (UPS) பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இதில் இணையவில்லை. அமலுக்கு வந்து 2 வாரம் ஆகியும் யாரும் பெரிதாக இதில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில் யூனிஃபைட் பென்ஷன் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஓய்வூதியப் பாதுகாப்பிற்கு இது ஒரு புரட்சிகரமான திட்டமாகப் பார்க்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக வடிவமைக்கப்பட்ட UPS, அரசு ஊழியர்களுக்கு NPS வழங்க முடியாத ஒரு விஷயத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.. அது வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம். இதனால் யூனிஃபைட் பென்ஷன் திட்டம் (UPS) பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இது முன்பு அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) மற்றும் தற்போது அமலில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களை ஒருங்கே உள்ளடக்கியது. சரி இந்த பென்சன் முறையில் பென்சன் எப்படி கணக்கிடப்படும்.. உங்களுக்கு எவ்வளவு பென்சன் வரும் என்று தெரிய வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள். ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு, ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் பார்முலா மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.

UPS திட்டத்தில் ஓய்வூதியம் உறுதி

சந்தை ஏற்ற இறக்கங்களால் NPS திட்டத்தின் பலன்கள் பாதிக்கப்படலாம். ஆனால், UPS திட்டத்தில் ஓய்வூதியம் உறுதி செய்யப்படுவதால், குறைந்த இடர் கொண்டதாக உள்ளது. NPS-ல் கிடைக்கும் தொகை, முதலீடுகள் மூலம் திரட்டப்பட்ட கார்பஸைப் பொறுத்தது. மாறாக, UPS திட்டத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ₹10,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் NPS-லிருந்து UPS-க்கு மாறுவதற்கான படிப்படியான ஆன்லைன் செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யார் UPS திட்டத்திற்குத் தகுதியானவர்கள்?

ஜனவரி 1, 2004 அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் (பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன்கள் உட்பட), தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் மற்றும் UPS-ஐத் தேர்வு செய்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். ரயில்வே ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், அகில இந்திய சேவைகள், ஒப்பந்த ஊழியர்கள் போன்றோர் CCS (Pension) விதிகள், 2021-இன் கீழ் ஏற்கனவே உள்ளவர்கள் இத்திட்டத்தைத் தேர்வு செய்ய முடியாது. தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் அக்டோபர் 1 வரை UPS-ஐ தேர்வு செய்ய அவகாசம் உள்ளது. ஏப்ரல் 1, 2025 அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் புதிய ஊழியர்கள், பணியில் சேர்ந்த 30 நாட்களுக்குள் UPS-ஐத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+