Enjoy Enjami பாடகர் தெருக்குரல் அறிவை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ஆதவ்! விஜய்யுடனும் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற "என்ஜாய் எஞ்சாமி" பாடலை பாடிய பாடகர் தெருக்குரல் அறிவு கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்த போலீஸார், முதல்வர் விஜய்யை சந்திக்க வைத்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தென்னிந்திய மாநிலங்களும் கோரிக்கைகளை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

Therukkural Arivu

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் அமைப்பினருக்கு ஆதரவாக போராட்டம் நடத்த சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த தெருக்குரல் அறிவு கோஷமிட்டபடியே அத்துமீறி உள்ளே நுழைய முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவருடன் வந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமைச் செயலகத்திற்கு அதே போலீஸ் வாகனத்தில் அறிவு அழைத்து வரப்பட்டார். அவர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து அவருடன் அரை மணி நேரம் நீட் விலக்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து வாசல் வரை வந்து அறிவை ஆதவ் வழியனுப்பி வைத்தார். தெருக்குரல் அறிவு கைது செய்யப்படவில்லை என்றும் அவர் விசாரணைக்காகவே அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதும் முதல்வர் விஜய், அறிவை சந்திக்க அழைத்து வருமாறு கூறியிருப்பார் என தெரிகிறது.

யார் இந்த தெருக்குரல் அறிவு?

தெருக்குரல் அறிவு என்பவரின் இயற்பெயர் அறிவரசு கலைநேசன். இவர் ஆல்பம் இயற்றுவார். ராப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற திறமைகளை உள்ளடக்கியவர்.

இவரது சொந்த ஊர் அரக்கோணம் ஆகும். இவர் பி.இ. படித்துவிட்டு எம்பிஏவும் படித்துள்ளார். சிறு வயது முதலே நாட்டுப்புறப் பாடல்கள் மீது அறிவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அப்போது முதலே சமூக விழிப்புணர்வு பாடல்களை எழுதத் தொடங்கினார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தெருக்குரல் என்ற ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். அது முதல் தெருக்குரல் அறிவு என அழைக்கப்படுகிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் இசைக்குழுவின் முன்னணி உறுப்பினராக இருந்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ ஆகியோருடன் இணைந்து இவரே எழுதிய "என்ஜாய், எஞ்சாமி" என்ற ஆல்பத்தை வெளியிட்டார். அதில் இவர் நடித்திருந்தார். இந்த பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது.

திரைப்படங்களில் மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு, நட்பே துணையில் சிங்கிள் பசங்க, சார்பட்டா பரம்பரையில் நீயே ஒளி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கோல்டன் ஸ்பாரோ என் நெஞ்சுல ஆரோ உள்ளிட்ட பாடல்களை கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+