அதிமுகவை திமுக ஆதரிக்க முன்வந்தது நிஜம்தான்.. எடப்பாடியே சொன்னார்! மாஃபா பாண்டியராஜன் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை திமுக ஆதரிக்க முன்வந்தது நிஜம்தான். இதை இல்லை என்று யாரும் சொல்லவில்லை. உதயநிதி ஸ்டாலினேயே இதை செய்து இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமியே கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் ஏற்றுக்கொண்டோமா? எனவே இது வெறும் புரளிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக தவெக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் இதை ஒட்டியே கருத்து தெரிவித்தன. ஆனாலும் அதிமுக தரப்பில் இதனை மறுத்தனர்.

Ma Foi Pandiarajan says DMK Ready to support Admk after election Edappadi Confirm this

அதிமுகவை ஆதரிக்க திமுக முன்வந்தது

இந்த சூழலில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனே வெளிப்படையாக இது பற்றி பேசியிருப்பது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:-

திமுக - அதிமுக கூட்டணி என்று புரளி கிளப்பப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். எந்த நிலையிலும் அதிமுக - திமுக கூட்டணி சிந்தித்து கூட பார்க்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதிமுகவை ஆதரிக்க திமுக முன்வந்தது என்று கூறியது நிஜம். இதை இல்லை என்று யாரும் சொல்லவில்லை. உதயநிதி ஸ்டாலினே அதை செய்து இருக்கிறார் என்று எடப்பாடியே சொன்னார்.

புரோக்கர் வேலை பார்க்கிறார் என

அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோமா.. எல்லா எம்.எல்.ஏக்கள் இருந்த இடத்தில் இது பற்றி பேசப்பட்டுள்ளது. நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் அவர்களுடைய ஆதரவை ஏற்று யாருமே சொல்லவில்லை. அப்படி ஒரு விஷயம் முற்றிலும் புரளி. கட்சியில் இருந்து வெளியே போவதற்கு இதை பயன்படுத்தி கொண்டார்கள். ராஜேந்திர பாலாஜி ஒரு சாதாரண விஷயம் சொன்னதை திரித்து போட்டு அவர்தான் இதற்கு புரோக்கர் வேலை பார்க்கிறார் என்று அமைச்சர் சொன்னது தவறான பேச்சு.

அதிமுக தீர்ந்த கட்சியாக வேண்டும் என்று ஒரு நரேட்டிவ் செட் செய்யப்படுகிறது. விஜய்யின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தகக்து. மூன்று ஆண்டுகளில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அப்போது எதிர்க்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்து கொண்டு விஜய், எங்கள் பெயரை சொல்வார்" என்றார்.

6 பேரை விஜய் தூக்கிவிட்டார்

முன்னதாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:- அதிமுக எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் இருக்கும்.. இந்தியாவில் முதன்மை கட்சியாக இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு போனார். ஜெயலலிதா சொல் பொய்யாகுமா? நாம ஒரு தேர்தலில் தவறிவிட்டோம்.. பல இடங்களில் தவறவிட்டுவிட்டோம்.. அதிமுக என்ற பெயரை கூட இதுவரை விஜய் சொல்லவில்லை. மற்றும் பலர் என்று சொல்கிறார். தீர்ந்த சக்தி என்கிறார்.

47 எம்.எல்.ஏக்களில் 6 பேரை இன்று விஜய் தூக்கிவிட்டார். குதிரை பேரம் நடத்தி தூக்கி கொண்டு போய்விட்டார். அவரது எண்ணமே இந்த கட்சியை தீர்ந்த சக்தி ஆக்கவேண்டும் என்பதுதான். இந்த நேரத்தில் வீறு கொண்டு எழுபவன் தான் மனுசன்.. இந்த கட்சி எவ்வளவு பெருமையை நமக்கு தந்து இருக்கிறது. எவ்வளவு அடையாளத்தை தந்து இருக்கிறது. நாம எப்படி இந்த நேரத்தில் விட்டுட்டு போவது, ஒதுங்கி போவது போன்றவற்றை செய்யலமா?

நாமளும் ரீல்ஸ் போடுவோம்

35 வயதுக்கு கீழே 5 பேர் மட்டுமே வந்து இருக்கிறீர்கள். அடுத்த முறை அரங்கத்தில் 10-க்கு ஒருவர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வர வேண்டும். 3 வருடத்தில் கண்டிப்பாக தேர்தல் வந்துவிடும். நாம் வந்து வீறு கொண்டு எழ வேண்டிய நேரம் இது. உள்ளாட்சி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தவெக அசைக்க முடியாத சக்தியாகிவிட்டது என்பது பில்டப்..

நாமளும் ரீல்ஸ் போடுவோம். இன்னைக்கு ஐடி விங்கில் நம்பர் 1 ல் இருப்பது அதிமுகதான். எடபபடி தலைமையை விமர்சித்து போனவர்களை பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. 14 முன்னாள் அமைச்சர்கள் போய்விட்டார்கள். ஆனால் 34 பேர் இங்கேதான் இருக்கிறோம் அதனால் பயப்பட வேண்டியது இல்லை. காசு கொடுத்து வாக்கு வாங்கும் கலாசாரம் போய்விட்டது" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+